“இந்திய பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடம்” - மன்மோகன் சிங் கருத்து 

“இந்திய பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடம்” - மன்மோகன் சிங் கருத்து 
“இந்திய பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடம்” - மன்மோகன் சிங் கருத்து 
Published on

இந்திய பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல சலுகைகளை கடந்த இரண்டு வாரமாக அறிவித்து வருகிறார். இந்தச் சூழலில் 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5%ஆக குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி குறைவிற்கு பல பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் முன்னாள் பிரதமரும் பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங், இந்திய பொருளாதார நிலை குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதில், “தற்போது இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்தது இந்தியாவில் நீண்ட நாட்களாக தேக்க நிலை நீடித்ததற்கான ஆதாராமாக உள்ளது. இந்திய பொருளாதாரம் இதைவிட வேகமாக வளர்க்க கூடிய சூழல் இருந்தும், மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளது. 

மேலும் உற்பத்தி துறையின் வளர்ச்சி வெறும் 0.6 சதவிகிதமாக இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது மோடி அரசு எடுத்த பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றிலிருந்து இந்திய பொருளாதாரம் மீளவில்லை என்று தெரிகிறது. இந்திய பொருளாதாரத்தில் தற்போதைய நிலை நீடிக்க கூடாது. ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பொருளாதாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com