குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் உள்ள நடிகை ரஷ்மிகா மந்தன்னாவின் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
‘கீதா கோவிந்தம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் பெரிய அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்தவர் ரஷ்மிகா மந்தன்னா. 23 வயதான ரஷ்மிகா, வளர்ந்து வரும் ஒரு முன்னணி கதாநாயகி ஆவார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல கன்னட மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ள இவர், குடகு மாவட்டத்திலுள்ள விராஜ்பேட்டையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த வருமானவரி அதிகாரிகள் இன்று காலை 7:30 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்தனர். வீட்டில் பல இடங்களில் சோதனை நடத்த ஆரம்பித்தனர். நடிகை ரஷ்மிகா வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.