பாகிஸ்தானிடம் தன்னை கொல்ல சொன்ன இந்திய ராணுவ வீரர்

பாகிஸ்தானிடம் தன்னை கொல்ல சொன்ன இந்திய ராணுவ வீரர்
பாகிஸ்தானிடம் தன்னை கொல்ல சொன்ன இந்திய ராணுவ வீரர்
Published on

செப்டம்பர் 29ம் தேதி அதிகாலை நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைகின் போது பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்ட இந்திய ராணுவ வீரர் தான் சாவை எதிர்ப்பார்த்து காத்திருந்ததாக கூறியுள்ளார்.

செப்டம்பர் 29-ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது. சுமார் 2 கி.மீ வரை எல்லைக் கோட்டைத் தாண்டி இந்த படை ஊடுருவிச் சென்று, அங்கிருந்த தீவிரவாத முகாம்களை அழித்தனர். அப்போது 22 வயது இந்திய ராணுவ வீரர் சந்து பாபுலால் சவான் பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்டார்.

செப்டம்பர் 29ம் தேதி பிடிப்பட்ட சவான், நான்கு மாதங்களுக்கு பிறகு ஜனவரி 21-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்போது அவர், பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை எவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள் என்பது பற்றி செய்தியாளர்களிடம் பேசினார்.

“எல்லை தாண்டி சென்ற என்னை பிடித்ததும், உடைகளை எடுத்து சோதனை செய்தனர். பின் கயிறுகளால் கட்டி வைத்து கொடுமை செய்தனர். இரவா பகலா என்பது கூட தெரியாமல் இருந்த நிலையில் செத்துவிட வேண்டும் என்று தோன்றியது,” என அவர் கூறினார்.

“பாகிஸ்தானில் என்னை கடுமையாக தாக்கினர். கொடுமை செய்தவர்களிடம் என்னை கொல்ல சொன்னேன். ஆனால் எனக்கு ஏதோ ஊசி போட்டு, தொடர்ந்து தாக்கினர்,” எனவும் சவான் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com