முடா முறைகேடு|அதிகாரத்தை கையில் எடுத்த ஆளுநர்.. மறுக்கும் முதல்வர்.. கர்நாடக அரசியலில் புயல்!

மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
சித்தராமையா
சித்தராமையா@siddaramaiah | Twitter
Published on

முடா எனப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்திருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் சித்தராமையாவிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் சித்தராமையா மீது விசாரணை நடத்த ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து, சித்தராமையா தனது இல்லத்தில், தலைமைச் செயலாளர் ஷாலினி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.

சித்தராமையா
சித்தராமையாஎக்ஸ் தளம்

இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, ”மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 2025 IPL|தோனியைத் தக்கவைக்கப் போராடிய CSK.. எதிர்த்த காவ்யா மாறன்.. பிசிசிஐ நிலைப்பாடு என்ன?

சித்தராமையா
”எனது மனைவிக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டதா? நடந்தது இதுதான்” - முதல்வர் சித்தராமையா விளக்கம்

இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க இது ஒரு பெரிய சதி. டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜகவினர் இதைச் செய்துள்ளனர். கர்நாடகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த சதியில் மத்திய அரசும், பாஜக, ஜேடி(எஸ்) உள்ளிட்ட கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தலைமை என்னுடன் உள்ளது. முழு அமைச்சரவையும், அரசாங்கமும் என்னுடன் உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் இருக்கின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ய தேவையில்லை” என்றார்.

இதையும் படிக்க: ”வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என அஞ்சினேன்”- எடைகுறைப்பு குறித்து பயிற்சியாளர் பகிர்ந்த ஷாக் தகவல்!

சித்தராமையா
சித்தராமையா பதவிக்கு ஆபத்து? கர்நாடகாவில் என்ன நடக்கிறது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com