இந்திய நாட்டின் இளம் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் அடையாளம் தெரியாத கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அது போலியான செய்து என்றும், தான் உயிரோடு இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார் நிஷா.
“நான் நலமாக இருக்கிறேன். தற்போது தேசிய சீனியர் போட்டியில் விளையாடுவதற்காக கோண்டா (GONDA) நகருக்கு வந்துள்ளேன். நான் கொல்லப்பட்டதாக வரும் செய்தி போலியானது” என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இதனை இந்தியா மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளி அன்று செர்பியாவில் நடைபெற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 72 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் அவர்.
முன்னதாக அவர் சோனிபட் பகுதியில் அமைந்துள்ள சுஷில் குமார் மல்யுத்த அகாடமியில் பயிற்சியை முடித்து கொண்டு வீடு திரும்பும் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என போலி செய்தி பரவி இருந்தது.