ஹைதராபாத் | இறந்துபோன மகன்.. தெரியாமலேயே 4 நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்!

மகன் இறந்துபோன விஷயம்கூட தெரியாமல், அவரது பார்வையற்ற பெற்றோர் நான்கு நாட்கள் அவருடன் தங்கியிருந்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் - மகன் இறந்தது தெரியாமல் 4 நாட்கள் சடலத்துடன் இருந்த பார்வையற்ற பெற்றோர்
ஹைதராபாத் - மகன் இறந்தது தெரியாமல் 4 நாட்கள் சடலத்துடன் இருந்த பார்வையற்ற பெற்றோர்x page
Published on

ஹைதராபாத் பிளைண்ட்ஸ் காலனியில் வசித்து வந்தவர், பிரமோத் (30). இவரது தந்தை ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கலுவா ரமணா. தாய், சாந்தி குமாரி. இவர்கள் அனைவரும் வாடகைக்கு வீடெடுத்து ஒன்றாக தங்கி வந்துள்ளனர். வயது முதிர்வால் கலுவா ரமணா - சாந்தி குமாரி தம்பதிக்கு பார்வை கோளாறு ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது. இதில் பிரமோத்துக்கு திருமணமாகிய நிலையில் இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக பிரமோத் மற்றும் அவரின் மனைவி தனித்தனியாகப் வாழ்வதாக கூறப்படுகிறது. பிரமோத்தின் குழந்தைகள், தாயோடு இருப்பதாகவும் தெரிகிறது.

ஹைதராபாத் - மகன் இறந்தது தெரியாமல் 4 நாட்கள் சடலத்துடன் இருந்த பார்வையற்ற பெற்றோர்
ஹைதராபாத் - மகன் இறந்தது தெரியாமல் 4 நாட்கள் சடலத்துடன் இருந்த பார்வையற்ற பெற்றோர்

இதற்கிடையே, கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, பிரமோத் மற்றும் அவரது பெற்றோர் வசிக்கும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், பிரமோத் உறங்கிய நிலையில் இறந்துபோனதாகவும், அவர் குடிக்கு அடிமையாகி இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அவருடைய உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், பிரமோத்தின் பார்வையற்ற பெற்றோர் மீட்கப்பட்டு, அவர்களுடைய மூத்த சகோதரர் பிரதீப்பிடம் போலீசார் ஒப்படைத்துள்ளளனர். தற்போது அவருடைய பராமரிப்பில் அவர்கள் உள்ளனர்.

சடலம்
சடலம்கோப்புப் படம்

இதுகுறித்து நாகோல் காவல் நிலையத் தலைமை அதிகாரி சூர்யா நாயக், “ரமணா மற்றும் சாந்திகுமாரி இருவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். உணவு மற்றும் தண்ணீர் கேட்டு பிரமோத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இதனால், அவர்களின் குரல்கள் பலவீனமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே அண்டைவீட்டாரும் அவற்றைக் கேட்கவில்லை. தற்போது அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். பிரமோத் குடிக்கு அடிமையானதால், அவர் சரியாக தங்களுக்கு பதில் கூறவில்லை என பெற்றோர் இருவரும் நினைத்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்துவருவதால், அதன்பின்னரே உண்மை தெரியவரக்கூடும்.

இதையும் படிக்க: தொடரும் போர் | ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவர் நியமனம்.. யார் இந்த ஷேக் நைம் காசிம்?

ஹைதராபாத் - மகன் இறந்தது தெரியாமல் 4 நாட்கள் சடலத்துடன் இருந்த பார்வையற்ற பெற்றோர்
ஹைதராபாத் | வேலை கிடைத்ததற்கு பார்ட்டி கொடுத்த இளம் பெண்! பால்ய நண்பனாலேயே நேர்ந்த விபரீதம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com