ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: பாஜக முன்னிலை

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: பாஜக முன்னிலை
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: பாஜக முன்னிலை
Published on

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 87 வார்டுகளிலும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி 33 வார்டுகளிலும், ஓவைசி கட்சி 17 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது.

இன்று வெளியாகிவரும் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகளின்படி, மொத்தமுள்ள 150 வார்டுகளில் 87 வார்டுகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 33க்கும் மேற்பட்ட வார்டுகளில் தெலங்கானாவின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 17 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலின் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com