ஹைதராபாத்தில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் மீது மேசை விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
ஹைதராபாத் நகரின் குகட்பள்ளி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ருக்மணி(24). இவர் காவலாளியாக பணிபுரிகிறார். இவர் தன் இரண்டு குழந்தைகள், விக்ரம்(5) மற்றும் ரித்திக் ரோஷன்(4) உடன் சங்க ரெட்டி மாவட்டத்திலிருந்து 2015ஆம் ஆண்டு ஹைதராபாத்திற்கு வந்து குடியேறினார்.
கடந்த திங்கட்கிழமையன்று ரித்திக் ரோஷன் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தான். ருக்மணி விக்ரம் உடன் வெளியே சென்றிருந்தார். அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரோஷன் மீது அருகில் இருந்த மர மேசை எதிர்பாராத விதமாக விழுந்தது. இதனால் அவருக்கு நெற்றி மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது.
இரண்டு மணி நேரம் கழித்து வீடு திரும்பிய ருக்மணியும் விக்ரமும் மேசை கீழ் சிக்கிக்கொண்டிருந்த ரோஷனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ரோஷன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனை, தற்செயலான மரண வழக்காக பதிவு செய்யப்பட்டது.