பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் இந்தியாவின் அனைத்து மூளைகளிலும் நடந்தேறி வருகிறது. அதுவும் பெண் குழந்தை வேண்டி பெண்களையே கொடுமைப்படுத்தும் கோர சம்பவங்கள் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையிலேயே இருக்கும்.
அவ்வகையில், அசாம் மாநிலத்தில் பெண் ஒருவரை அவரது கணவரும், கணவரின் பெற்றோரும் பெண் குழந்தைக்காக அமிலம் கொடுத்திருக்கிறார்கள்.
கரிம்காஞ்ச் மாவட்டத்தின் ரதாபரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஹிரப்நகர் அருகேதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி கணவர் மற்றும் அவரது பெற்றோரால் அமிலம் கொடுக்கப்பட்ட சும்னா பேகம் என்ற பெண் உயிரிழந்துவிட்டதாக தி அசாம் செண்டினெல் செய்தி மூலம் அறிய முடிகிறது.
இது தொடர்பான விசாரணையில், சும்னா பேகமை அவரது கணவர் ஷகீல் அஹ்மதும், பெற்றோரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தியது தெரிய வந்திருக்கிறது. மேலும், பெண் குழந்தை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக ஷகீலும் அவரது பெற்றோரும் சும்னா பேகமிற்கு ஆசிட் கொடுத்ததால்தான் உயிரிழந்தார் என்பதும் உறுதியாகிருக்கிறது.
இதனையடுத்து ஷாகீல் அஹ்மதுவை கரிம்காஞ்ச் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்பநாப் பருவா கைது செய்திருப்பதாக ANI செய்தி தளத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்று பெண் குழந்தைகளுக்காக பெண்களை பெண்களே கொடுமைப்படுத்தும் நிகழ்வு நாடு முழுவதும் நடந்து வருவது பலர் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தி வருவதால் அரசாங்கம் தரப்பில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.