அசாமில் நூற்றுக்கணக்கான யானைகள் கிராமத்தில் புகுந்து அட்டகாசம்

அசாமில் நூற்றுக்கணக்கான யானைகள் கிராமத்தில் புகுந்து அட்டகாசம்
அசாமில் நூற்றுக்கணக்கான யானைகள் கிராமத்தில் புகுந்து அட்டகாசம்
Published on

அசாமில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து துவம்சம் செய்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 

அசாம் மாநிலம் காதியாடோலி என்ற வனப்பகுதியில் இருந்து உணவு தேடி  நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் நகோன் கிராமத்துக்குள் புகுந்தது. ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் பயிர்கள் வீடுகள் போன்றவற்றை துவம்சம் செய்தது. யானைகள் ஊருக்குள் புகுந்தது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வனக்காவலர்களை பிடித்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்திய கிராம மக்கள் நான்கு பேரை கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், காதியாடோலி  வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் கிராமத்துக்குள் புகுந்தது. இதனையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யானைகள் கூட்டமாக வந்ததால் எங்களால் அதனை விரட்ட இயலவில்லை. இந்நிலையில் இரு யானைகளுக்குள் சண்டை ஏற்பட்டதால்  அவைகள் மோதிக்கொண்டதால் வீடுகள் சேதமடைந்து என தெரிவித்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com