லட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
டெல்லியில் கனாட் பிளேஸ், இண்டியா கேட், கோவில்கள் என முக்கிய பகுதிகளில் புத்தாண்டை கொண்டாட ஏராளமான மக்கள் குவிந்தனர். இந்தநிலையில் லஜ்பத்நகர் மேம்பாலத்தின் ஒருபகுதி சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருந்தது. இதனால் இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசல் நகரின் மற்ற பகுதிகளிலும் போக்குவரத்தை பாதித்ததால் ஆங்காங்கே நெரிசல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்தமுடியாத சூழலில் பல இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் நிறுத்தப்பட்டு காவலர்கள் போக்குவரத்தை சீரமைத்தனர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏராளமானோர் மெட்ரோ ரயில் சேவையை நாடியதால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.