ஆசியாவின் மிகப்பெரிய மாம்பழ உற்பத்தியாளராக முகேஷ் அம்பானி உருவானது எப்படி?

ஆசியாவின் மிகப்பெரிய மாம்பழ உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளராக முகேஷ் அம்பானி உருவானது எப்படி. தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்போ கால் நூற்றாண்டுக்கு முன் பயணிக்க எங்களுடன் வாருங்கள்.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானிமுகநூல்
Published on

செய்தியாளர்:கௌசல்யா

ஆசியாவின் மிகப்பெரிய மாம்பழ உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளராக முகேஷ் அம்பானி உருவானது எப்படி. தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்போ கால் நூற்றாண்டுக்கு முன் பயணிக்க எங்களுடன் வாருங்கள்.

பெட்ரோலியம் முதல் சில்லறை வர்த்தகம் வரை இந்தியாவில் முன்னணி வர்த்தகத்தில் முகேஷ் அம்பானி ஈடுபட்டிருப்பது உலகம் அறிந்தது. ஆனால், சேலத்து மாம்பழத்தையும் குஜராத் மண்ணில் விளைவித்து வேளாண் ஏற்றுமதியிலும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறார் முகேஷ் அம்பானி.

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால் 1997ஆம் ஆண்டுகளில் அப்பகுதிகளில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது அந்நிறுவனத்திற்கு பெரும் சவாலாக இருந்தது.

அப்போது முகேஷ் அம்பானி முன்னோக்கி எடுத்த முடிவுதான். இன்று வேளாண் உற்பத்தியிலும் முன்னணி ஏற்றுமதியாளராக உருவாகக் காரணமானது. தங்களின் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள 600 ஏக்கர் வறண்ட நிலத்தை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பண்படுத்தி மாஞ்செடிகளை நடவுசெய்தனர்.

இப்படி உருவான இந்த மா பண்ணை, முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானியின் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தத் தோட்டதில் 200 வகைகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மாமரங்கள் உள்ளன. இங்கு, கேசர், அல்போன்சா, ரத்னா, சிந்து, நீலம், அமராபல்லி உள்ளிட்ட உள்நாட்டு வகைகளுடன், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் விளையும் மாம்பழங்களின் வகைகளும் நடவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், ஆண்டுக்கு 600 டன்கள் அளவிற்கு தற்போது இந்தத் தோட்டத்தில் மாங்கனிகள் உற்பத்தியாகின்றன. இவற்றை உள்நாட்டில் விற்பனைக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல் ஏற்றுமதியும் செய்து அந்நிய செலாவணி ஈட்டுகிறார் முகேஷ் அம்பானி. இதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாஞ்செடிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு வழங்கியதோடு, விவசாயத் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியையும் அவர்களுக்கு அளித்து வருகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் பல துறைகளில் கோலோச்சினாலும், முக்கிய வர்த்தகம் என்றால் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புதான்.

முகேஷ் அம்பானி
சிவகாசி: 15 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை... தனியார் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது!

தங்கள் நிறுவனம் அமைந்துள்ள ஜாம்நகரில், சுற்றுப்புறச் சூழல் மாசடைவதை கட்டுப்படுத்த எழுந்த சவால்களை சரிசெய்ய அவர் கால் நூற்றாண்டுக்கு முன் மாற்றி யோசித்ததன் விளைவுதான் ஆசியாவின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதியாளராக அடையாளம் காணச் செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com