காவிரியில் தமிழகத்திற்கான உரிமை நீர் எத்தனை டிஎம்சி? தற்போதைய இருப்பு என்ன? கர்நாடகா கொடுத்தது என்ன?

தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், இதற்கு கர்நாடகம் மறுப்பு தெரிவிக்கிறது. காவிரியில் தமிழகத்திற்கான உரிமை நீர் எத்தனை டிஎம்சி. அங்கு தற்போதுள்ள நீர் இருப்பு என்ன? விரிவாக பார்க்கலாம்.
காவிரி நீர்
காவிரி நீர்pt web
Published on

கர்நாடக அணைகளில் தற்போதைய இருப்பு என்ன?

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மண்டியா, ஷிவமோக, ஹாசன், உத்தர கன்னடா, தக்ஷிணா கன்னடா, சிக்கமங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்தும் ஏற்ற இறக்கமாக நீடித்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடியாக உள்ளநிலையில், தற்போது 104.50 அடியாக இருக்கிறது. நீர் இருப்பு 26.458 டிஎம்சியாக உள்ளது.

மைசூர் மாவட்டத்தில் உள்ள கபிணி அணையின் நீர்மட்டம் 84 அடியில் தற்போது 82.73 அடியாக உள்ளது. அணையில் இருந்து உபரி நீர் திறப்பு 5000 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் 18.69 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 5542 கன அடியாக அதிகரித்துள்ளது

காவிரி நீர்
தொடரும் இணக்கமான போக்கு; நாம் தமிழர் உடன் கூட்டணியா? அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

டி.எம்.சி என்பது என்ன?

பருவமழை காலத்தில் இவ்வளவு கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது அல்லது இத்தனை டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டது என்ற வார்த்தைகளை ஒவ்வொரு முறையும் கேட்கிறோம். ஆனால் அதற்கு சரியான அர்த்தம் என்ன தெரியுமா?. அணைகளுக்கு வரும் மற்றும் வெளியேறும் நீரின் அளவை குறிக்க `டி.எம்.சி' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஒரு டி.எம்.சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி என்பதன் சுருக்கமாகும். அதாவது ஒரு டி. எம்.சி என்பது 100 கோடி கனஅடி நீர் ஆகும். 1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் ஆகும். அதன்படி ஒரு டி.எம்.சி என்பது 2,830 கோடி லிட்டர் ஆகும். ஒரு வினாடிக்கு ஒரு குழாய் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒரு கனஅடிஎன்று அழைக்கப்படுகிறது.

காவிரி விவகாரம்
காவிரி விவகாரம் முகநூல்

12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 24 லட்சம் லாரிகளில் தான் ஒரு டி. எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும். ஆனால் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்து விடும் தண்ணீர் மிக மிக குறைவு. நாள்தோறும் ஒரு டிஎம்சி வீதம் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில் இதனை கர்நாடக அரசு மறுத்துள்ளது.

காவிரி நீர்
உ.பி|காய்ச்சலால் உயிரிழந்த சகோதரி; ஆம்புலன்ஸ் இல்லாததால் உடலை சுமந்தே சென்ற சகோதரர்கள்! #viralvideo

கர்நாடக அரசு கொடுத்தது என்ன?

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 177.24 டிஎம்சி தண்ணீர் நீர்ப்பாசன ஆண்டு கணக்குப்படி வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 81 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் 96 டிஎம்சி தண்ணீர் நிலுவை வைத்துள்ளது.

நடப்பாண்டில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 9 டி எம் சி யும், ஜூலை மாதத்திற்கு 31 டிஎம்சி யும், ஆகஸ்ட் மாதத்திற்கு 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். கடந்த ஜூன் 1-ம்தேதி முதல் தற்போதுவரை 20 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இதுவரை 4.89 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

காவிரி நீர்
’சமூகநல திட்டங்களை புரிதலேஇல்லாமல் விமர்சிப்பதா?’ - இந்தியன்2-ல் இடம்பெற்ற காட்சி குறித்த விமர்சனம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,197 கனஅடியில் இருந்து, 3,087 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 41.65 அடியில் இருந்து 41.97 அடியாக இருக்கிறது. அணையின் நீர்இருப்பு 13.12 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைகளிலும் சுமார் 70% அளவிற்கு நீர் இருப்பு உள்ளபோதும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி உரிமை நீரை வழங்காமல் கர்நாடகா அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

காவிரி நீர்
இதயங்களை கவிதை வரிகளால் தாலாட்டும் கன்னிகாபுரத்துக் கவிஞன்! தமிழால் உயிர்வாழும் நா.முத்துக்குமார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com