புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடந்துவரும் கடந்த 17 நாட்களில் 11 விவசாயிகள் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை மேற்கொள்காட்டி, மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி.
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றுவரும் கடந்த 17 நாட்களில் 11 விவசாயிகள் இறந்துவிட்டதாகக் கூறும் ஊடக அறிக்கையை மேற்கோள்காட்டியுள்ள ராகுல்காந்தி, சட்டங்களை ரத்து செய்ய விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேசிய தலைநகர் டெல்லியில் பல்வேறு எல்லைகளில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுக்கிடையில் ஐந்து சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன, ஆனாலும் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் போராட்டம் தொடர்கிறது.