நிர்பயா வழக்கு - கருணை மனுவால் தள்ளிப்போகுமா குற்றவாளிகளின் தூக்கு ?

நிர்பயா வழக்கு - கருணை மனுவால் தள்ளிப்போகுமா குற்றவாளிகளின் தூக்கு ?
நிர்பயா வழக்கு - கருணை மனுவால் தள்ளிப்போகுமா குற்றவாளிகளின் தூக்கு ?
Published on

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனு அளித்திருப்பதால் 22ஆம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி குடியரசு தலைவருக்கு, குற்றவாளிகளுள்‌ ஒருவரா‌ன முகேஷ் சிங் கருணை மனு அளித்தார்.

இந்நிலையில், தண்டனைக்கு எதிராக முகேஷ் சிங் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகேஷ் சிங்கின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருப்பதால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி 22ஆம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு தெரிவித்தது.

குற்றவாளியின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்த பின்னர், குற்றவாளிகளுக்கு அது தொடர்பாக 14 நாட்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருப்பதை நீதிமன்றத்தில் அரசு தரப்பு சுட்டிக்காட்டியது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தண்டனை நிறைவேற்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையில் தவறில்லை என்று கருதியதாலேயே தான் உச்சநீதிமன்றம் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு, மறுஆய்வு மனு மற்றும் மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது என கருத்து தெரிவித்தனர்.

வேண்டுமெனில் இது தொடர்பாக மீண்டும் விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதிகள் கூறினர்‌. இதனிடையே முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி, பரிந்த‌ரை செய்திருப்பதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com