வீட்டில் இருந்துகொண்டே ஃப்லிகார்ட் மூலம் மாதம் 8 லட்சம் சம்பாதித்து வருகிறார் ஹரியானாவைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசி.
ஃப்லிப்கார்ட் நிறுவனம் வீட்டிலிருந்து கொண்டே வர்த்தகம் செய்வதற்கு பல வழிகளை வகுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் தங்கள் பொருட்களை ஆன்லைனில் மூலம் விற்பனை செய்வது. இதன்மூலம் நிறையே பெண்கள் தங்களின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்துவருகின்றனர்.
கடந்த 2018ல் ஃப்லிப்கார்ட் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்பவர்களில் 10 சதவிகித பெண் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு விற்பனை செய்பவர்களில் ஒருவர் தான் ரீத்து கௌசிக். ஹரியானா மாநிலத்தின் சொனிபட் கிராமத்தில் இவர் வசித்து வருகிறார். இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய். இவரின் கணவர் ஒரு அரசாங்க ஊழியர்
.
சிறுவயதிலேயே (16) திருமணம் முடித்த இவர், தன் கணவரின் உதவியுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தார். தன் சுற்றத்தார் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது பார்த்தவுடன் ரீத்துவிற்கு தாமும் ஆன்லைனில் தொழில் தொடங்கவேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. ஆனால் அவரது சுற்றத்தார் அவர் பெண் என்பதால் தொழில் தொடங்க வேண்டாம் என அறிவுரை வழங்கி உள்ளனர்.
ஆனால் அவர்களின் அறிவுரைகளை பொருட்படுத்தாது ரீது ஆன்லைனில் தொழில் தொடங்க முடிவு செய்தார். இதற்காக தன் கணவரின் உதவியுடன் கணினியை இயக்க கற்றுக்கொண்டார். அதன்பின் 2016 ஆம் ஆண்டில் ஆன்லைனில் சுயமாக தயாரித்த கைப்பைகளை விற்க திட்டமிட்டார். இதற்கு ‘ரீத்து கலெக்ஷன்ஸ்’ என பெயரிட்டார். அதன் பிறகு அதனை ஆன்லைன் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் படிப்படியாக வியாபாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
இந்த வியாபாரம் குறித்து ரீத்து,“அவர் தொழில் தொடங்க ஃப்லிப்கார்ட் நிறுவனம் அறிவுரை மற்றும் கடன் வழங்கி உதவியது” என்கிறார்.
மேலும் அவர் தொழில் தொடங்கிய முதல் வருடத்தில் மாதத்திற்கு ரூ 1 லட்சம் சம்பாதித்தார். அதன்பின்னர் அவரது கைப்பொருட்களுக்கு தென் இந்தியாவில் கிடைத்த வரவேற்பால் அதிக லாபம் ஈட்டத்தொடங்கினார். அதன் பிறகு றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளது இவரது பிசினஸ். இன்று 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார். இந்தத் தொகை ஆண்டுக்கு அல்ல; மாதத்திற்குதான். ஆகவே இன்று இவர்தான் டாக் ஆஃப் த டவுன். சமூக வலைத்தளத்தில் இவரது தன்னம்பிக்கை கதை வைரல் ஸ்டோரியாக மாறியிருக்கிறது.
ரீத்து தனது எதிர்கால திட்டம் குறித்து கூறுகையில் “ரீத்து கலெக்ஷன்ஸ் நிறுவனத்தை இந்தியா முழுவதும் புகழ்பெற்ற வைப்பதே லட்சியம்” என்கிறார். அதேபோல மாதத்திற்கு ரூ 20 லட்சம் சம்பாதிப்பதே அவரது லட்சியம் என்றார்.