'சபரிமலை கோவிலை மூட ரகசிய திட்டமிருக்கிறது' ராகுல் ஈஸ்வரின் கருத்தும் கைதும் !

'சபரிமலை கோவிலை மூட ரகசிய திட்டமிருக்கிறது' ராகுல் ஈஸ்வரின் கருத்தும் கைதும் !
'சபரிமலை கோவிலை மூட ரகசிய திட்டமிருக்கிறது' ராகுல் ஈஸ்வரின் கருத்தும் கைதும் !
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு  கடந்த 17 ஆம் தேதி ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பெண்கள் சபரிமலை கோயில் சந்நிதானத்துக்கு செல்ல முயன்றதால் பரபரப்பு நிலவியது. பக்தர்களின் தொடர் போராட்டங்களால் யாரும் கடைசிவரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

இந்நிலையில் சபரிமலைக்கு வந்த பெண்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவகாரம் தொடர்பாக கேரள காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையை கையில் எடுத்தது. இதுதொடர்பாக இதுவரை 2061 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 450 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய மாநில காவல் தலைமை அதிகாரி லோக்நாத் பெஹெரா, கைது செய்யப்பட்ட தகவல் உறுதியானது. அவர்கள் மீது வன்முறையை தூண்டுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல், மக்களை தாக்குதல், மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தக் கைதில் தாழமோன் தந்திரிகள் குடும்பத்தின் வாரிசும், ஐயப்ப தர்ம சேனா தலைவருமான ராகுல் ஈஸ்வரும் ஒருவர். இவர் தேவஸம் போர்டின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஜாமீனில் வெளியே வந்தார் ராகுல் ஈஸ்வர். ராகுல் ஈஸ்வர் அக்டோபர் 24 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "எங்கள் எதிர்ப்பையும் மீறி, குறிப்பிட்ட வயது பெண்கள் அய்யப்பன் கோவிலுக்குள் நுழைந்து இருந்தால், கோவிலை மூட வைக்க ரகசிய திட்டம் தீட்டி இருந்தோம். அதன்படி, கோவில் வளாகத்தில் சுமார் 20 பக்தர்கள் கத்தியால் தங்கள் உடலை கீறி, ரத்தம் சிந்தி, கோவிலை மூடச்செய்ய தயாராக இருந்தனர்."

"கோவில் தரையில் ரத்தம் பட்டால், அர்ச்சகர்கள் கோவிலை மூடி விடுவார்கள் என்பதே எங்கள் கணக்கு. அதன்பிறகு, கோவிலை சுத்தப்படுத்துவதற்காக, 3 நாட்கள் கோவில் மூடப்பட்டு இருக்கும். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல், போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர்கள் தடுத்து விட்டனர். இருப்பினும், வருடாந்திர சீசனுக்காக 3 மாத காலம் அய்யப்பன் கோவில் நடை திறந்து இருக்கும். "

"அப்போது, குறிப்பிட்ட வயது பெண்களை கோவிலுக்குள் நுழைய அனுமதித்தால், மேற்கண்ட திட்டத்தை பக்தர்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது.நான் தந்திரி குடும்பத்தை சேர்ந்தவன். அய்யப்பன் கோவில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டுக்கு சொந்தமானது என்று கேரள அரசு கூறுவதை ஏற்க முடியாது. இது, கடவுள் ஐய்யப்பனுக்கு சொந்தமானது" என சர்சைக்குறிய வகையில் பேசியிருந்தார் இதற்காகத்தான் ராகுல் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com