உணவங்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி: மாநில அமைச்சர்கள் குழு பரிந்துரை

உணவங்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி: மாநில அமைச்சர்கள் குழு பரிந்துரை
உணவங்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி: மாநில அமைச்சர்கள் குழு பரிந்துரை
Published on

உணவகங்களை குளிர்சாதன வசதி அடிப்படையில் பிரிக்காமல், ஒரே சீராக 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசுக்கு, மாநில அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பிறகு குளிர்சாதன வசதி இல்லாத உணவகங்கள், குளிர்சாதன வசதி உள்ள உணவகங்கள் என்ற அடிப்படையில் வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நட்சத்திர உணவகங்கள், குளிர்சாதன உணவகங்கள், குளிர்சாதன வசதி இல்லா உணவகங்கள் என்ற அடிப்படையில் 28%, 18%, 12% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. 

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டிக்கான மாநில அமைச்சர்கள் குழு கூட்டத்தில், உணவகங்களை குளிர்சாதன வசதி அடிப்படையில் பிரிக்காமல் ஒரே சீராக 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மாநில அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் காம்போசிஷன் எனப்படும் தொகுப்பு திட்டத்தில் உற்பத்தியாளர்களுக்கு 2 சதவிகிதமும், உணவகங்களுக்கு 5 சதவிகிதமும் விதிக்கப்படும் வரியை, ஒரு சதவிகிதமாக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி கவுகாத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இப்பரிந்துரைகளை ஏற்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com