“ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும்” - ரஷ்ய அதிபர் புதின்

“ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும்” - ரஷ்ய அதிபர் புதின்
“ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும்” - ரஷ்ய அதிபர் புதின்
Published on

ஏ.கே.203 ரக தொழிற்சாலையால் நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்று பேசிய அவர், அடுத்த 70 ஆண்டுகளுக்கு ராணுவ தளவாடங்களை ரஷ்யாவின் கூட்டோடு இந்தியாவில் உற்பத்தி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கூறினார். 

தொழிற்சாலை மூலம் தயார் செய்யப்படும் முதல் 7 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் நமது நாட்டு பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளப்படும் என்றும், அதன்பின் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் கடிதத்தை படித்துக் காட்டினார். அதில், ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும் என்று புதின் தெரிவித்து இருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com