சிறுவன் உடலில் 22 லிட்டர் ரத்தம் உறிஞ்சிய புழுக்கள்!

சிறுவன் உடலில் 22 லிட்டர் ரத்தம் உறிஞ்சிய புழுக்கள்!
சிறுவன் உடலில் 22 லிட்டர் ரத்தம் உறிஞ்சிய புழுக்கள்!
Published on

உத்தரகாண்டில் சிறுவன் ஒருவனின் உடலில் இருந்து கொக்கிப் புழுக்கள், 2 வருடமாக லிட்டர் கணக்கில் ரத்தத்தை உறிஞ்சி இருப்பதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். 

உத்தரகண்ட் மாநிலம், ஹல்த்வானி பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் ஒருவன், நீண்ட காலமாக இரத்த சோகை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளான். சிறுவனுக்கு அவனின் பெற்றோர்கள் பல இடங்களில் சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், அவனை பரிசோதித்த டாக்டர்கள் இரத்த சோகையை குறைப்பதற்கான மாத்திரைகள் மற்றும் மருந்துகளை அளித்துள்ளனர். இந்நிலையில், சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், பெற்றோர்களை அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். 

மருத்துவர்கள் சிறுவனின் குடல் பகுதியில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, சிறுவனின் குடல் பகுதியில் நூற்றுக்கணக்கான கொக்கிப் புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த புழுக்கள் சிறுவனின் உடலில் இருந்து 2 வருடத்தில் சுமார் 22 லிட்டர் ரத்ததை உறிஞ்சி இருப்பதையும் அவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த புழுக்கள் மிகவும் ஆபத்தானவை எனவும், இத்தனை வருடங்கள் இந்த புழுக்கள் சிறுவனின் இரத்தத்தை உறிஞ்சி வருவதை எப்படி மருத்துவர்கள் கண்டுப்பிடிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். 

இதுகுறித்து பேசிய மருத்துவர் அரோரா, ”மனித உடலில் புழுக்கள் இருப்பது சகஜமான ஒன்று. ஆனால் இந்த சிறுவனின் உடலில் அளவுக்கு அதிகமான புழுக்கள் இடம்பெற்றிருப்பதும், இத்தனை வருடங்கள் அவனின் ரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஹிமோகுளோபின் அளவைக் கொண்டே இரத்த சோகையை  என்பதை எளிதில் கண்டுப்பிடித்து விடலாம். அதே போல் இந்த சிறுவனின் ஹீமோகுளோபின் அளவும் குறைவாக இருந்ததால் பல மருத்துவர்கள் அவனுக்கு எண்டோஸ்கோபி செய்துள்ளனர். ஆனால், அதிலும் கொக்கிப்புழுக்கள் தென்படாமல் இருந்துள்ளது. தற்போது அதை நீக்குவதற்கான முறையாக சிகிச்சை நடைபெற்று வருகிறது. எனவே, சிறுவயது முதலே முறையான உணவு பழக்கத்தை கையாளுவதே இதுப் போன்ற பிரச்னைகளில் இருந்து காப்பாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com