குடியுரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் தற்போதைய நிலவரம் குறித்தும் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. டெல்லி, லக்னோ உள்ளிட்ட இடங்களில் நிலவும் அசாதாரண சூழலை முடிவுக்கு கொண்டுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், நாடு முழுவதும் நிலவும் போராட்டங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சியின் முன்னணி தலைவர்களுடன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.