ஹெச்ஐவி-யால் அதிகளவிலான இளைஞர்கள் பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்!

ஹெச்ஐவி-யால் அதிகளவிலான இளைஞர்கள் பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்!

ஹெச்ஐவி-யால் அதிகளவிலான இளைஞர்கள் பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்!
Published on

15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களே ஹெச்ஐவி-யால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்பநலத்துறை வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்படி, ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஆண்களில் 0.30% பேர் 15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பு, 15-49 வயது வரை ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்களில் உச்சபட்ச சதவிகிதம் ஆகும். அத்துடன் 15-54 வயது வரை ஹெச்ஐவி பாதிப்புடையோரின் எண்ணிக்கை 0.24% அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

15-24 வயது வரை உள்ள இளைஞர்கள் ஹெச்ஐவி-யால் அதிக பாதிப்படைந்திருக்கும் நிலையில், அதே வயதுள்ள பெண்கள் ஹெச்ஐவி-யால் பாதிப்பே அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வாழும் 0.48% ஹெச்ஐவி பாதிப்புடைய குடும்பத்தினரில், கணவன்-மனைவி இருவருக்கும் ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது 0.04% தான். இதில் கணவனுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருந்து, மனைவிக்கு ஹெச்ஐவி பாதிப்பு இல்லாதது 0.22% ஆகும். இதேபோன்று மனைவிக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருந்து, கணவனுக்கு இல்லதாதும் 0.22% ஆகும். இந்தியாவில் 69% ஆண்களும், 43% பெண்களும் ஹெச்ஐவியால் பாதிப்படைந்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com