சாதிய இடஒதுக்கீட்டில் தற்போது உள்ள முறையை அகற்றிவிட்டு, அதேமுறையை பொருளாதார அடிப்படையில் கொண்டு வர வேண்டும் என அகில பாரத் இந்து மகாசபா வலியுறுத்தியுள்ளது.
சாதிய இடஒதுக்கீடு குறித்து பேசிய இந்து மகாசபா செய்தித்தொடர்பாளர் அசோக் பாண்டே, சாதிய அடிப்படையிலான
இடஒதுக்கீடுகள் சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். அத்துடன் இந்த முறையை நிறுத்த வேண்டும் என்றும்
அவர் கூறினார். இடஒதுக்கீட்டினால் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரே பயனடைகிறார்கள் என்றால், பாஜகவின் சப்கா சாத் சப்கா விகாஷ் என்ற முழக்கம் அர்த்தமற்றது என்றார்.
மாநில மற்றும் தேசிய எஸ்.சி/எஸ்டி ஆணைய முன்னேற்றம் குறித்து பேசிய அவர், அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்தில் எஸ்.சி/எஸ்டி சமுதாயத்தினருக்கு முறையாக இடஓதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.