இந்தி மொழி கற்பிப்பதை கட்டாயப்படுத்தக் கூடாது: ஆலோசனைக்குழு பரிந்துரை

இந்தி மொழி கற்பிப்பதை கட்டாயப்படுத்தக் கூடாது: ஆலோசனைக்குழு பரிந்துரை
இந்தி மொழி கற்பிப்பதை கட்டாயப்படுத்தக் கூடாது: ஆலோசனைக்குழு பரிந்துரை
Published on

இந்தி மொழி கற்பிப்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தலைமையில் நடைபெற்ற இந்தி ஆலோசனை குழு கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, சிபிஎஸ்இ-ன் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கேந்திர வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு கடந்த மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தி பேசாத மாநிலங்களின் விமர்சனங்களுக்கு ஆளானது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் பாஜகவின் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரபூர்வமான மொழிக்கான நாடாளுமன்ற குழு அளித்த பரிந்துரைகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். அனைத்து தரப்பிலிருந்தும் வந்த எதிர்ப்பை தொடர்ந்து இந்தி மொழியை கட்டாயப்படுத்த கூடாது என்ற நிலைப்பாட்டிற்கு மத்திய அரசு வந்துள்ளதாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com