ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைக்கின்ற மொழியாக இருக்கிறது 'இந்தி' : அமித் ஷா

ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைக்கின்ற மொழியாக இருக்கிறது 'இந்தி' : அமித் ஷா
ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைக்கின்ற மொழியாக இருக்கிறது 'இந்தி' : அமித் ஷா
Published on

மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கை அரசியல் ரீதியாக இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் “ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைக்கின்ற மொழியாக இருக்கிறது இந்தி” என தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. 

உடல்நலக் குறைவினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளார். 

“இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. 

நம் நாட்டில் சுதந்திரப் போராட்டத்திற்கான புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்தே ஒட்டுமொத்த மக்களையும் ஓரணியில் ஒன்றாக திரட்ட இந்தி சக்தி வாய்ந்த ஊடகமாக பயன்பட்டு வருகிறது. 

அதன் அசல் தன்மையும், எளிமையும் தான் இந்தி மொழியின் பலம்.

இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சியை மனதில் கொண்டே புதிய கல்விக் கொள்கை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது மோடி அரசாங்கம்.

மொழி மற்றும் புவியியல் எல்லைகோட்டினால் தான் ஒரு நாடு அடையாளம் காணப்படுகிறது. 

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் அதன் மொழிகள் தான் பலம். அது நம் ஒற்றுமையின் அடையாளமும் கூட.

மொழி, கலாச்சாரம் என இந்தியா வேறுபட்டிருந்தாலும் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைக்கின்ற மொழியாக இருக்கிறது இந்தி மொழி” என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com