இமாச்சல பிரதேசத்தில் தாமி கிராமத்தில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது.
சிம்லாவில் உள்ள தாமி கிராமத்தில் காளியை குளிர்விப்பதற்காக இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. பக்தர்கள் இரண்டு பிரிவாக பிரிந்துகொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.
உடலில் வடியும் ரத்தம் காளிக்கு அளிக்கப்படும் காணிக்கையாக கருதப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படுவதாக இந்தக் கிராம மக்கள் கூறுகின்றனர். நரபலிக்கு மாற்றாக இந்த விநோத திருவிழா கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.