இமாச்சல்: பெண்ணின் திருமண வயது அதிகரிப்பு...மசோதா நிறைவேற்றம்!

ஆண்களுக்கு நிகராக பெண்களுடைய சராசரி திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதாவை, இமாச்சலப் பிரதேச அரசு நிறைவேற்றியுள்ளது.
மசோதா
மசோதா Facebook
Published on

ஆண்களுக்கு நிகராக பெண்களுடைய சராசரி திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதாவை, இமாச்சலப் பிரதேச அரசு நிறைவேற்றியுள்ளது.

குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் 2006-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ், ஆணின் சராசரி திருமண வயது 21 ஆகவும் , பெண்ணின் சராசரி திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இதனை மாற்றும் வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆண்களுக்கு நிகராக பெண்களுடைய திருமண வயதையும் 21 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. சில தரப்பு எதிர்ப்புகளால் இன்னும் அது அமல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த சூழலில், இமாச்சலப் பிரதேச அரசு, பெண்களின் சராசரி திருமண வயதையும் 21 ஆக அதிகரிக்கும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

மசோதா
”என்னை தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் யுபிஎஸ்சிக்கு கிடையாது” - பூஜா கேட்கர்

பாலின சமத்துவத்தை உறுதி செய்யவும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி , தொழில் உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக, திருமண வயதை உயர்த்தி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com