61 மணி நேரம் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்... முக்கிய நிகழ்வுகள் என்னென்ன?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாகவே நிறைவுபெற்றது. எதிர்க்கட்சிகளின் விவாதம் இல்லாமல் மூன்று முக்கிய குற்றவியல் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்pt web
Published on

- செய்தியாளர் கணபதி சுப்ரமணியம்

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் மக்களவையில் மேலும் மூன்று உறுப்பினர்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையையும் சேர்த்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய குற்றவியல் மசோதாக்களுக்கு மாநிலங்களவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்றம்
ஒரு நாள் முன்பே குளிர்கால கூட்டத் தொடர் நிறைவு: எதிர்கட்சிகள் இல்லாமல் நிறைவேறிய முக்கிய மசோதாக்கள்!

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாட்சிய மசோதாக்கள் எதிர்ப்பே இல்லாமல் நிறைவேறின. எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியில் இல்லாத ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், அதிமுக உள்ளிட்டவை ஆளுங்கட்சியான பாஜகவுடன் விவாதத்தில் பங்கேற்றன. புதிய சட்டங்கள் இந்திய மக்களுக்கு சுலபமாக நியாயம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு குழப்பங்களை தீர்த்து வைக்கும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாகி, நடைமுறையில் ஐபிசி உள்ளிட்ட சட்டங்களுக்கு மாற்றாக விரைவில் அமல்படுத்தப்படும்.

அமித் ஷா
அமித் ஷாட்விட்டர்

தொலைத்தொடர்பு துறைகளில் மாற்றம் செய்யும் டெலிகாம் மசோதாவும் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்படதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். 14 அமர்வுகளில் மக்களவை 61 மணி நேரம் மற்றும் 50 நிமிடம் நடைபெற்றது. தொடர்ச்சியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்களவை தனது வேலை நேரத்தில் 74 சதவிகிதம் செயல்பட்டதாக ஓம் பிர்லா தெரிவித்தார்.

நாடாளுமன்றம்
தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்!

மாநிலங்களவையில் 17 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், எதிர்க்கட்சிகளின் அமளியால் வேலைநேரத்தில் 22 மணி நேரம் வீணானது என்றும் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். வேலை நேரத்தில் 79 சதவிகிதம் மட்டுமே அலுவல்கள் நடைபெற்றதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டது தவிர, மாநிலங்களவை தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரான ஜகதீப் தன்கர் கேலி செய்யப்பட்ட விவகாரமும் பெரிய சர்ச்சையானது.

நாடாளுமன்றம்
ஜகதீப் தன்கர் போல மிமிக்கிரி - “மனம் நொந்து போனேன்” குடியரசுத் தலைவர் வேதனை!

இந்நிலையில் திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே குளிர்கால கூட்டத்தொடர் நேற்று நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com