சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பத்து வயது சிறுமி மான்வியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, அவரது குடும்பத்தினர் ஆன்லைனில் கேக் ஒன்றை ஆர்டர் செய்தனர். ஆர்டர் செய்து வந்த கேக்கை சாப்பிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனில்லாமல் சிறுமி மான்வி தன் பிறந்தநாளிலேயே உயிரிழந்ததார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்திய காவல்துறையினர், கடை உரிமையாளரை கைது செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், விசாரணையின் முடிவானது தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதன்படி மான்யா சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் என்ற இனிப்புச் சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால் மான்வி இறந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து பேக்கரியின் மீதும் பேக்கரி உரிமையாளர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பொதுவாகவே உணவு மற்றும் பானங்களில் சிறிய அளவிலான சாக்கரின் பயன்படுத்தப்பட்டாலும், அது அதிக அளவில் ரத்த குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம். ஆகவே சாக்கரின் அளவில் கவனம் தேவை. இதை உணர்ந்து உணவக உரிமையாளர்கள் செயல்பட வேண்டும். வீட்டிலேயே கேக் போன்ற இனிப்பு வகைகளை செய்யும்போதும், சர்க்கரை அளவில் கூடுதல் கவனம் தேவை.
இதையும் படிக்கலாம்: அமெரிக்காவில் வேகமாக பரவிவரும் பறவைக்காய்ச்சல்; எச்சரிக்கை விடுக்கும் WHO