ஆந்திரா| பெண்கள் விடுதி கழிவறையில் இருந்த ரகசிய கேமரா.. கொந்தளித்த மாணவர்கள்.. போலீசார் விசாரணை!

ஆந்திராவில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் பெண்கள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா
ஆந்திராஎக்ஸ் தளம்
Published on

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆந்திராவில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் பெண்கள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியின் விடுதி கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை பார்த்து மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். பெண்கள் விடுதி கழிவறையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்ததாகவும், சில மாணவர்கள் இந்த வீடியோக்களை கைதான மாணவனிடம் இருந்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, ’இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; எங்களுக்கு நீதி வேண்டும்’ எனக் கேட்டு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது.

இதையும் படிக்க: உ.பி|7 குழந்தைகள் உட்பட 9பேரை கொன்ற ஓநாய்கள்; தூக்கத்தை இழந்த 30கிராமங்கள்! ‘ஆபரேஷன் பெடியா’ தீவிரம்

ஆந்திரா
ஜேம்ஸ்பாண்ட் செட்: பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தவர் கைது!

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். ’பொருத்தப்பட்ட கேமராவில் வீடியோக்கள் எதுவும் பதிவாகவில்லை’ என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணா மாவட்ட எஸ்பி கந்தாதர் ராவ், "எங்கள் சோதனையில் பெண்கள் விடுதிகளில் மறைத்து வைக்கப்பட்ட கேமராக்கள் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகத்திற்குரிய மாணவர்களின் மடிக்கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களை மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் முன்னிலையில் சோதனை செய்தோம். வீடியோக்கள் எதுவும் கிடைக்கவில்லை. மாணவிகள் கவலைப்பட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

என்றாலும், இச்சம்பவம் தொடர்பாக, பிடெக் இறுதியாண்டு படிக்கும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவரது மடிக்கணினி மற்றும் மொபைல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் வீடியோக்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அக்கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதைத் தொடர்ந்து, மாணவிகள் பலர், அக்கழிவறைகளையே பயன்படுத்தவே அச்சப்படுவதாகவும், பெரும்பாலும் அப்பகுதிகளைத் தவிர்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், பெங்களூருவில் உள்ள பிரபல காபி ஷாப் ஒன்றின் கழிப்பறையில், குப்பைத்தொட்டியில் ஸ்மார்ட் போன் மூலம் ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தலையில் தொடர்ந்து பந்து தாக்கி காயம்| ஆஸி. அதிரடி வீரர் 26 வயதிலேயே ஓய்வு?

ஆந்திரா
மருத்துவமனையில் ரகசிய கேமரா.. பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்தவர் கைது..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com