கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குதான்!

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் கிரெடிட் கார்டு வாடிக்கயாளர்கள் பணத்தை செலுத்த இனி 3ஆம் தரப்பு செயலியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டுபுதிய தலைமுறை
Published on

ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற பெரிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டின் பில்களைச் செலுத்த ஃபோன்பே, அமேசான் பே, பேடிஎம் போன்றவற்றை இனி பயன்படுத்த முடியாது.

ஏனெனில், அனைத்து கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளும் பாரத் பில்-பே சிஸ்டம் மூலம் செலுத்தப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 கிரெடிட் கார்டு
அசாம்: முக்கிய நதிகளில் அபாயக் கட்டத்தைத் தாண்டிய வெள்ளம்.. சுமார் 24 லட்சம் பேர் பாதிப்பு

இந்நிலையில், நேஷனல் பேமெண்ட்ஸ் ஆஃப் இந்தியா மூலம் நிர்வகிக்கப்படும் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டத்துடன் இந்த செயலிகள் ஒருங்கிணைக்கப்படாததால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டு பில்களை வங்கிகளில் நேரடியாகவோ அல்லது நெஃப்ட், ஐஎம்பிஎஸ் போன்ற மாற்று வழிகள் மூலமாகவோ செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால் ஃபோன்பே, பில்டெஸ்க் போன்ற ஃபிண்டெக் நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com