ஜம்மு - காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
ரம்பன் மாவட்டத்தில் சனாசர், பாட்னிடாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், சாலைகள் மட்டுமின்றி மரம், செடி, கொடிகள் அனைத்திலும் வெண்பனி படர்ந்து காட்சியளிக்கிறது. சாலைகளில் ஒரு அடி அளவுக்கு மேல் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. மோசமான பனிப்பொழிவின் காரணமாக வெளியே வர முடியாமல், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.