ஊரக உள்ளாட்சித் தேர்தல்; வாட்டி வதைக்கும் குளிர்... - இன்னும் சில முக்கியச் செய்திகள்!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் இன்று 2-ம் கட்டத் தேர்தல். மலை கிராமங்களுக்கு குதிரை மற்றும் கழுதை மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கு. இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னையில் குடியுரிமை சட்டத்தை கோலமிட்டு நூதன முறையில் எதிர்த்த 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு. கோலத்தில் சொன்ன கருத்துகள் அலங்கோலமாக இருந்ததால் நடவடிக்கை என அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்
தலைமை தளபதியின் வயது வரம்பை நிர்ணயம் செய்தது மத்திய அரசு. ராணுவ தளபதி பிபின் ராவத்தே தலைமை தளபதியாக நியமிக்கப்படுவார் எனத் தகவல்
மகர விளக்கு மகா உற்சவத்துக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோயில். ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறுகிறது மகர விளக்கு பூஜை
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்பு
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர். மூன்று நாட்களுக்கு அடர்ந்த மூடுபனி நிலவும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு
நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கி கவுரவம். நாட்டின் உயரிய திரைத்துறை விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
பெண்களுக்கான உலக அதிவேக செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன். ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி மகுடம் சூடினார்.