பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 2ஆவது கட்டத்தில் முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட 1,28,630 பேருக்கு தடுப்பூசி.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு. காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் இடங்கள் நாளை முடிவாகும் எனத் தகவல்.
அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்து அமைச்சர்களுடன் பாஜக மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோர் ஆலோசனை.தொகுதிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.
'நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு' என ஃபேஸ்புக்கில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பதிவு.அதிமுகவுடன் தொகுதிப்பங்கீட்டில் சிக்கல் நீடிக்கும் நிலையில் கருத்து.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி போட்டி. அசாதுதின் ஒவைஸி அறிவிப்பு.
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கமான நேரத்தில் இயங்கும் என அறிவிப்பு.9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்.
மேற்கு வங்காளத்தில் தீவிர மதச் சார்புள்ள கட்சியுடன் கூட்டு வைத்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா விமர்சனம்.கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான முடிவு என ட்விட்டரில் கருத்து.
இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் நீதி வழங்க வேண்டும்.ஐநா சபை முன் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.
நாட்டின் ஜிஎஸ்டி வரி வசூல் பிப்ரவரியில் 7% உயர்ந்து 1 லட்சத்து 13 ஆயிரத்து 143 கோடியை தொட்டது.தமிழகத்தில் வசூல் 9% அதிகரித்து 7 ஆயிரத்து 8 கோடி ரூபாயை தொட்டதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்.