விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்.. ஐபிஎல் ஏலம்.. இன்றைய முக்கியச் செய்திகள்.!

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்.. ஐபிஎல் ஏலம்.. இன்றைய முக்கியச் செய்திகள்.!
விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்.. ஐபிஎல் ஏலம்.. இன்றைய முக்கியச் செய்திகள்.!
Published on

மேற்கு வங்கத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சு.திரிணாமூல் காங்கிரஸின் அரசியல் எதிரிகளே காரணம் என மற்றொரு அமைச்சர் குற்றச்சாட்டு.

மத்திய அரசுக்கு நெருக்கடியை அதிகரிக்க விவசாயிகள் இன்று நாடு தழுவிய அளவில் ரயில் மறியல். பாதுகாப்புக்காக வட மாநிலங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் குவிப்பு.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு முந்தைய அரசுகளே காரணம்.தமிழகத்தில் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய விழாவில் பிரதமர் மோடி பேச்சு.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இன்று கூடுதல் பொறுப்பேற்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.இரட்டை குழந்தைகளை சமாளிப்பது போல் பிரச்னைகளை சமாளிப்பேன் என புதிய தலைமுறைக்குப் பேட்டி.

புதுச்சேரி மக்களின் உரிமைகளுக்காக தர்ம யுத்தத்தில் ஈடுபடுவேன் என ராகுல் ஆவேசம்.காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், மீனவர்கள் மத்தியில் பேச்சு.

எளிய நடைமுறைகள் அமலில் இருப்பதால், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது. தமிழகத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிய நிகழ்வில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

அதிமுக பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் சசிகலா தொடர்ந்த வழக்கு.அடுத்த மாதம் 15ஆம் தேதி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணை.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி தொடங்குகிறது.21ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று, பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

கடலூரில் படுகொலை செய்யப்பட்டவர் தாதா போல் வலம் வந்தவர் என அதிர்ச்சித் தகவல். பழிக்குப் பழியாக வெட்டிக் கொன்ற கும்பலின் தலைவன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை.

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அநேக இடங்களில் வெற்றி.சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என முதல்வர் அமரிந்தர் கருத்து.

மலாலாவைக் கொல்லப்போவதாக ஏற்கனவே துப்பாக்கியால் சுட்ட தலிபான் பயங்கரவாதி மிரட்டல்.இம்முறை தவறு நிகழாது என ட்விட்டரில் எச்சரிக்கை - எதிர்ப்பைத் தொடர்ந்து கணக்கு முடக்கம்.

சென்னையில் இன்று நடைபெறுகிறது 14 ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்.164 இந்திய வீரர்கள் உட்பட 292 வீரர்களை 8 அணிகள் ஏலம் எடுக்க உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com