இன்றைய தினத்தின் சில முக்கியச் செய்திகள்...
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியானது. புதிய கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு.
கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அரசியலாக்க வேண்டாம் என பாரத் பயோடெக் நிறுவனம் வேண்டுகோள். 3ஆவது கட்ட சோதனையில் உள்ள போது அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதிப்பது வழக்கமானதுதான் என விளக்கம்.
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 8 ஆம் தேதிவரை கருத்து கேட்பு கூட்டம். 9 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு.
தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்க அரசாணை. நடிகர்கள் விஜய், சிம்பு உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அறிவிப்பு
மூடிய அரங்குகளில் இடைவெளியின்றி அமர்ந்திருந்தால் அதிவேகமாக கொரோனா பரவும். தொற்றுநோய் தடுப்பு மைய துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் எச்சரிக்கை.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவலால் அங்கிருந்து கோழி மற்றும் முட்டையை கொண்டு வர தடை. எல்லையோர மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைகளை கண்காணிக்குமாறும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடந்திய ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி. 8ஆவது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 8ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
தமிழகத்தில் ஜனவரி 12ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.
அரசு வேலை பெற போலியாக பணி ஒதுக்கீடு ஆணை அளித்த இருவர் சென்னையில் கைது. 45 பேரிடம் பணம் பெற்று போலி சான்று வழங்கியது அம்பலம்.
மதுரையில் ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு போட்டி. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு.
புதிய நாடாளுமன்ற கட்டடப்பணிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு. இன்று தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்.