பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2 ஆயிரத்து 500 ரொக்கம் பெற இன்று முதல் டோக்கன் விநியோகம். பொதுமக்களின் வீடு தேடி விநியோகிக்க நியாய விலை கடை பணியாளர்களுக்கு உத்தரவு.
20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு.
ஆந்திரா, அசாம், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை அடுத்த வாரம் தொடக்கம். தடுப்பூசி செலுத்துவதால் நிகழும் நடைமுறை சிக்கல்களை புரிந்து கொள்வதற்கான முன்னோட்டம் என மத்திய அரசு அறிவிப்பு.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள். பிரச்னையை தீர்க்க திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு.
மத்திய அரசு பிரச்னையை தீர்க்க முயலாமல் விவசாயிகளை பணிய வைக்க பார்ப்பதாக காங்கிரஸ் விமர்சனம். விவசாயிகளின் துயரங்களை பார்க்காமல் விளக்கம் மட்டுமே கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை அறிக்கை.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறதா பாஜக? செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் மழுப்பிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுவதாக முதல்வருக்கு ஸ்டாலின் பதில். ஜனவரி 10 ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடப்பது உறுதி எனவும் பேச்சு
103 கிலோ தங்கம் மாயமான விவகாரம். சிபிஐ மீது திருட்டு வழக்குப் பதிவு செய்தது சிபிசிஐடி.
பாக்ஸிங் டே டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலியா.