ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியுள்ளதாக அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் இயங்கி வரும் பிரபல தனியார் வங்கியில் ஒன்று ஹெச்.டி.எஃப்.சி. இந்த வங்கியின் நெட் பேங்கிங் சேவை கடந்த ஐந்து நாட்களாக முடங்கியுள்ளதாக அதன் வாடிக்கையாளார்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2-ஆம் தேதி முதல் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியது.
எனினும் அதன்பிறகு கடந்த 4-ஆம் தேதி இந்தச் சேவையை மீண்டும் சரி செய்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த இணையதள சேவையிலுள்ள சில பரிவர்த்தனைகள் செயல்படவில்லை என்று மீண்டும் வாடிக்கையாளர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஒருவர், “கடந்த 5 நாட்களாக ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியுள்ளது. இந்தச் சேவைகள் எப்போது மீண்டும் இயங்க தொடங்கும்” எனப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “மீண்டும் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். நாட்டிலுள்ள தனியார் வங்கிகள் அதிகளவில் வாடிக்கையாளர்களை கொண்ட வங்கி ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகும். அத்துடன் இந்த வங்கியின் வாடிக்கையாளர்களில் 90 சதவிகிதம் பேர் இணையதளத்தில் தங்களின் பரிவர்த்தனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.