உஷார்: டவர் அமைக்க இடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறி நூதன மோசடி

உஷார்: டவர் அமைக்க இடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறி நூதன மோசடி
உஷார்: டவர் அமைக்க இடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறி நூதன மோசடி
Published on
மொபைல் டவருக்கு இடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறி நூதன மோசடி நடப்பதாக பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில், தொலைதொடர்பு நிறுவனத்தின் பெயரைக் கூறி உங்கள் நிலத்தில் 4ஜி, 5ஜி மொபைல் டவர் அமைக்க எங்கள் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தால் பல லட்சம் ரூபாய் வரை முன்பணம் தருவதாகவும், மாத வாடகை தருவதாகவும் உங்களை எவரேனும் தொடர்பு கொள்ளக்கூடும். அதன்பின் பட்டா எண், ஆதார், வங்கி கணக்கு எண் விபரங்களை பெற்று கொண்டு, அரசுக்கு வழங்க வேண்டிய கட்டணம், வரி செலுத்த வேண்டும் எனக் கூறி உங்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெறுவார்கள்.
அதன்பின் அவர்களை உங்களால் தொடர்பு கொள்ள முடியாது எனவும் பலர் இதுபோல் பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளனர் எனவும் இதுபோன்ற போலியான அழைப்புகள், மெயில்கள், மெசேஜ்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் அந்த வீடியோவில் அறிவுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com