உயரதிகாரி பாலியல் தொல்லை: பெண் ஐஏஎஸ் பரபரப்பு புகார்!

உயரதிகாரி பாலியல் தொல்லை: பெண் ஐஏஎஸ் பரபரப்பு புகார்!
உயரதிகாரி பாலியல் தொல்லை: பெண் ஐஏஎஸ் பரபரப்பு புகார்!
Published on

தனது உயரதிகாரி பாலியல் தொல்லைக் கொடுப்பதாக பெண் ஐஏஎஸ் அதிகாரி எழுதிய பேஸ்புக்கில் எழுதிய பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

ஹரியானா மாநிலத்தில் பணியாற்றும் 28 வயதான பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது உயரதிகாரியை பற்றி பேஸ்புக்கில் பரபரப்பு குற்றச் சாட்டுகளை கூறியிருந்தார். இந்தியில் எழுதப்பட்டிருந்த அந்த பதிவில், ‘எனக்கு வரும் பைல்களில் தவறுகள் இடம் பெற்றிருந்தால், அதை அடிக்கோடிட்டு, அதில் எனன் தவறு உள்ளது என்பதை எழுதி ஊழியர்களுக்கு திருப்பி அனுப்புவேன். இது தொடர்பாக ஊழியர்கள் சிலர் உயர் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த அதிகாரி என்னை அவரது அறைக்கு அழைத்து மிரட்டல் விடுத்தார். 

கடந்த 6-ம் தேதி தனது அறைக்கு மாலை 5 மணிக்கு அழைத்த அவர், 7.39 வரை அங்கேயே உட்கார வைத்தார். அவருக்கு எதிரில் நான் அமர்ந் திருந்தேன். உடனே, தனது அருகில் வந்து அமரும்படி கூறினார். எப்படி வேலை செய்ய வேண்டும் என்று கம்யூட்டரில் காண்பிப்பது போல என் அருகில் நெருங்கி, தொட்டபடி பேசினார். அலுவலகத்தில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மோசமான வார்த் தைகளால் சொன்னார். அவரது பாலியல் தொல்லை அதிகரித்ததால் இதை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்று கூறியிருந்தார். 

இந்தப் பதிவு பரபரப்பானது. இதுகுறித்து அந்த உயரதிகாரியிடம் கேட்டபோது, இதை மறுத்துள்ளார். அந்த பெண் அதிகாரி, புதிதாக பணிக்கு சேர்ந்தவர். அலுவலகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி வேலை செய்ய வேண்டும் என்று சொல்வது என் கடமை. அதைதான் நான் தெரிவித்தேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com