ஹரியானா: காங். தோல்வி.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜிலேபி.. ராகுலை விமர்சிக்கும் பாஜக.. ஏன் தெரியுமா?

ஹரியானாவில் காங்கிரஸின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்படும் நிலையில் அதில் ஜிலேபியும் புதிதாய்ச் சேர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த ஜிலேபி விவகாரம் தற்போது தேர்தல் முடிவுகளுடன் இணைந்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
ராகுல் காந்தி, ஜிலேபி
ராகுல் காந்தி, ஜிலேபிஎக்ஸ் தளம்
Published on

ஹரியானா : காங்கிரஸ் தோல்வி - இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜிலேபி

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், ஜம்மு - காஷ்மீரில் என்.சி.-காங்கிரஸ் கூட்டணியும், ஹரியானாவில் பாஜக மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்க இருக்கின்றன. முன்னதாக, ஹரியானாவில் இன்று காலை தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே பல தொகுதிகளில் முன்னிலையில் இருந்தனர். இதனால் தேர்தல் பிந்தையக் கருத்துக்கணிப்புகளின் காங்கிரஸே, அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என நம்பினர்.

ஹரியானா
ஹரியானாமுகநூல்

ஆனால், நேரம் செல்லச்செல்ல தலைகீழ் மாற்றத்தைச் சந்தித்தது ஹரியானாவின் வாக்கு எண்ணிக்கை நிலவரம். ஆம், மதியத்திற்குப் பிறகு பாஜக முன்னிலை பெறத் தொடங்கியதுடன், தற்போது அக்கட்சியே அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கவும் இருக்கிறது. காங்கிரஸின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதில் ஜிலேபியும் புதிதாய்ச் சேர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த ஜிலேபி விவகாரம் தற்போது தேர்தல் முடிவுகளுடன் இணைந்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. தவிர, பாஜகவினர் பலரும் காங்கிரஸ்காரர்களுக்கு ஜிலேபியைக் கொடுத்து வெறுப்பேற்றி வருகின்றனர்.

இதையும் படிக்க: கொல்கத்தா | தொடரும் உண்ணாவிரத போராட்டம்.. 50 மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!

ராகுல் காந்தி, ஜிலேபி
ஹரியானா நிலவரம் | காங்கிரஸை பின்னுக்கு தள்ளி முன்னேறிய பாஜக.. தலைகீழாக மாறிய முன்னிலை நிலவரம்!

ஜிலேபி குறித்துப் பேசிய  ராகுல் காந்தி!

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பிரசாரத்தின்போது கோஹானா ஜிலேபி புராணம் தொடங்கியது. அப்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "ஜிலேபியை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்த ஜிலேபிகளை செய்யத் தொழிற்சாலைகளை அமைக்கலாம். அப்படி அமைத்தால் பல ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்" என்று கூறியிருந்தார்.

அதாவது மாநிலத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மையைக் குறித்தே அவர் இதுபோல பேசியிருந்தார். ஆனால், இது அங்கு மிகப்பெரிய அரசியல் விவகாரமாக மாறியது. ராகுல் காந்தி பேச்சுக்கு ஹரியானா பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். இந்த விவகாரத்தைவைத்தே பாஜகவினர் ஜிலேபியை இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கோஹானா ஜிலேபி என்பது என்ன?

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பரபரப்பாகப் பேசப்பட்ட கோஹானா ஜிலேபி, 1958ஆம் ஆண்டு மறைந்த மாட்டு ராமால் தொடங்கப்பட்டது. இந்த வணிகத்தை தற்போது அவரது பேரன்கள் ராமன் குப்தா மற்றும் நீரஜ் குப்தா நடத்தி வருகின்றனர். இந்த ஜிலேபி சுத்தமான நெய்யில் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஜிலேபி 250 கிராம் எடை கொண்டது, இது மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும். நான்கு ஜில்பிகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 320 ரூபாய். இந்த ஜிலேபி பெட்டி ஒரு வாரத்திற்கும் மேலாக கெடாமல் இருக்கும்.

இதையும் படிக்க: “வினேஷ் போகத் எங்கு சென்றாலும்..” - தேர்தலில் வெற்றிபெற்றதை கடுமையாக விமர்சித்த பிரிஜ் பூஷன் சிங்!

ராகுல் காந்தி, ஜிலேபி
’1 கிலோ ஜிலேபி வாங்கி வா’- புகார்கொடுக்க சென்றவரிடம் உத்தரவிட்ட போலீஸ்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com