ஹரியானா முதல்வர்: மக்களின் விருப்பத் தேர்வு யார்? கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?

இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் ஹரியானா முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அது ஏன் என்பதை பார்ப்போம்...
பூபேந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா
பூபேந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜாpt web
Published on

காங்கிரஸ்கே வெற்றி

ஹரியானாவில் கடந்த இரண்டு முறை பாஜக வெற்றி பெற்ற நிலையில், இம்முறை ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மும்முரம் காட்டியது. இந்நிலையில் நேற்று ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதையடுத்து ஹரியானாவில் காங்கிரஸுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. குறிப்பாக ஹரியானாவில் காங்கிரஸுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று சனிக்கிழமை பல கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. அதன்படி 90 இடங்களில் காங்கிரசுக்கு 44-54 இடங்களும், பாஜகவுக்கு 15-29 இடங்களும் கிடைக்கும் என டைனிக் பாஸ்கர் கணித்துள்ளார். சி-வோட்டர்-இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவில் காங்கிரஸுக்கு 50-58 இடங்களையும், பாஜகவுக்கு 20-28 இடங்களும் கிடைக்கும் என முடிவு வெளியாகியுள்ளது. அதே சமயம் ரிபப்ளிக் பாரத்-மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு முடிவில் பாஜகவுக்கு 55-62 இடங்கள் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பூபேந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா
சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் - கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

முதல்வர் தேர்வு யார்?

பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளில் காங்கிரஸுக்கே ஆதரவு கிடைத்துள்ள நிலையில், தற்போது முதல்வர் யார் என்ற போட்டி சூடுபிடித்துள்ளது. அந்தவகையில்,

1) பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனி, ஹரியானா வாக்காளர்களின் முதல்வர் தேர்வாக மிகவும் பிரபலமானவராக உள்ளார்.

2) தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா முதல்வர் பதவிக்கான முதன்மை தேர்வாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

3) அடுத்ததாக காங்கிரஸ் தலைவர்களான தீபேந்தர் சிங் ஹூடா உள்ளார்.

4) நான்காவது தேர்வாக குமாரி செல்ஜா மற்றும்

5) ஐந்தாவதாக முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான மனோகர் லால் கட்டார் முதல்வர் தேர்வு விருப்ப பட்டியலில் உள்ளனர்.

கருத்து கணிப்புகள் படி, பூபிந்தர் சிங் ஹூடா 30.8 சதவீத வாக்குகளுடன் பட்டியலில் முதலிடத்திலும், இவர் ஆண் வாக்காளர்கள் மத்தியில் பிரபலமானவராகவும், அதே சமயம் 28.9 சதவீத பெண்கள் பூபிந்தர் சிங் ஹூடா முதல்வராக விருப்பம் தெரிவித்துள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

அடுத்ததாக தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனி சைனி 22.1 சதவீத வாக்குகளுடன், 22.5 சதவீத ஆண்கள் மற்றும் 21.7 சதவீத பெண்களின் விருப்ப முதல்வர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மூன்றாவதாக தீபேந்தர் ஹூடா 9.5 சதவீத வாக்குகளுடன், செல்ஜா 4.9 சதவீத வாக்குகளும் மற்றும் மத்திய அமைச்சரான மனோகர் லால் கட்டாரை முதல்வராக 4.5 சதவீதம் பேர் மட்டுமே விரும்புவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மறுபுறம் 20 சதவீத ஆண்கள் உட்பட 24.6 சதவீதம் பேர் முதல்வராக புதிய முகத்தை விரும்புவதாகவும் கணக்கெடுப்பு காட்டுகிறது.

பூபேந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: இரு குழுவினர் இடையே மோதல் - வீடியோ வைரலான நிலையில் 5 பேர் கைது

முதல்வர் போட்டியில் குமாரி செல்ஜா

பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பூபிந்தர் சிங் ஹூடா காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர், அரசியலில் நீண்ட கால ஈடுபாடு மற்றும் மாநில அரசியலில் விரிவான அனுபவம், இரண்டு முறை முதல்வராக இருந்துள்ளார். அதேவேளையில், மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஒதுக்கப்பட்ட மக்களவைத் தொகுதியின் சிட்டிங் எம்.பி.யுமான செல்ஜா முதல்வர் போட்டியில் உள்ளனர். ஒரு பெண் மற்றும் தலித் என்ற அடிப்படையில் தனது முயற்சியை குமாரி செல்ஜா நிலைநிறுத்துகிறார். அத்தனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி தேர்தல் பிரசாரத்திற்கிடையில் செல்ஜா சில நாட்கள் ஒதுங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் முதல்வராக ஆசை இருக்கும். குமாரி செல்ஜா , ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியரம் முதல்வராக விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் “கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் மேலிடமும்தான் முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும்” என்று பூபேந்திர சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

மறுபுறம் பாஜகவின் அம்பாலா காண்ட் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் அனில் விஜ், “ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் . என்னை முதல்வராக்க விரும்பினால் அதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் போட்டியில் உள்ள தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனி கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து தரப்பினருக்காகவும் பாஜக செயல்பட்டுள்ளது. ஹரியானாவின் வளர்ச்சிக்கு புதிய வேகத்தை கொடுத்துள்ளோம். ஆகவே மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பூபேந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா
10 லட்சம்பேர் கண்டுகளிப்பு... லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுகிறது சென்னை விமான சாகச நிகழ்ச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com