கேரள முழு அடைப்பில் வன்முறை: தீ வைப்பு, கலவரத்தில் 6 பேர் படுகாயம்

கேரள முழு அடைப்பில் வன்முறை: தீ வைப்பு, கலவரத்தில் 6 பேர் படுகாயம்
கேரள முழு அடைப்பில் வன்முறை: தீ வைப்பு, கலவரத்தில் 6 பேர் படுகாயம்
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் இன்று நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் வன் முறை ஏற்பட்டது. 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரி மலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், போலீ சார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

இந்நிலையில் பிந்து, கனகதுர்கா என்ற 2 பெண்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இது பரபரப்பை ஏற் படுத்தியது. பெண்கள் சபரிமலை வந்ததை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மாநிலம் தழுவிய முழு அடைப்பிற்கு சபரிமலை கர்ம சமிதி உட்பட பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

கடைகள் திறக்கப்படாது என்றும் வாகனங்கள் இயங்காது என் றும் அறிவிக்கப்பட்டன. பந்த் காரணமாக கேரளாவில் நடக்க உள்ள பள்ளி அரை யாண்டு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளும் தள்ளி வைக் கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை முழு அடைப்பு தொடங்கியது. கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்தனர். சாலையில் டயர்களை எரித்தனர். கண்ணூரில் கார் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. கோயிலாண்டி என்ற இடத்தில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பல இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீதும் அக்கட்சியின் தலைவர்கள் வீடுகள் மீதும் கற்கள் வீசப்பட்டன.
பாலக்காட்டில் உள்ள வெண்ணக்காரா என்ற இடத்தில் உள்ள ஈஎம்எஸ் மெமோரியல் நூலக கட்டடத்திற்கு சிலர் தீவைத்தனர். தவனூர், மலப்புரம் மாவட்டங்களில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகங்களுக்கும் தீவைக்கப்பட்டன.

கொட்டாரக்கராவில் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சில இடங்க ளில் கடைகளை மூடும்படி இந்து அமைப்பினர் மிரட்டி வருவதாக கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்துள்ள பக்தர்கள் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

’’வன்முறையில் ஈடுபடுவர்களும் கடைகளை கட்டாயப்படுத்தி அடைக்கச் சொல்பவர்களும் கைது செய்யப்படுவார்கள்’’ என்று டிஜிபி லோகநாத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பத்தினம்திட்டாவில் உள்ள பண்டாளத்தில் நேற்று நடந்த கலவரத்தில் படுகாயமடைந்த பாஜக தொண்டர் சந்திரன் உன்னிதன் உயிரிழந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் தொண்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com