விழாவுக்கு தாமதம்: தனக்குத் தானே அபராதம் விதித்துக்கொண்ட அமைச்சர்

விழாவுக்கு தாமதம்: தனக்குத் தானே அபராதம் விதித்துக்கொண்ட அமைச்சர்

விழாவுக்கு தாமதம்: தனக்குத் தானே அபராதம் விதித்துக்கொண்ட அமைச்சர்
Published on

அரசு விழாவுக்கு சரியான நேரத்துக்கு வராமல் தாமதமாக வந்த தெலங்கானா நிதி அமைச்சர் தனக்குத் தானே அபராதம் விதித்துக் கொண்டார்

தெலங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சகோதரி மகன் ஹரீஷ் ராவ். இவர் தற்போது தெலங்கானா மாநில நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தெலங்கானா தனி மாநில போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு சந்திரசேகர ராவுக்கு உறுதுணையாக இருந்தவர். அதனைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ், அவருக்கு இரண்டு முறையும் அமைச்சரவையில் பதவி கொடுத்துள்ளார். 

இந்நிலையில் சித்திபேட்டா மாவட்டம், துப்பாக்கா நகராட்சி சார்பில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவுக்கு அமைச்சர் ஹரீஷ் ராவ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். ஆனால் விழாவுக்கான நேரம் கடந்தும் அமைச்சர் வரவில்லை. குறிப்பிட்ட நேரம் கடந்த நிலையில் அமைச்சர் ஹரீஷ் ராவ் விழாவுக்கு தாமதமாக வந்தார். பின்னர் மக்களிடையே பேசிய அவர், தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோரினார். மேலும் தாமதத்துக்காக தனக்குத் தானே ரூ,50 லட்சம் அபராதம் விதித்துக்கொள்வதாக மேடையிலேயே அறிவித்தார். 

இந்த அபராதத் தொகையைக் கொண்டு மகளிர் சுய உதவிக் குழுவுக்கு கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்தார். அமைச்சரின் இந்த திடீர் அறிவிப்பால் அங்கு கூடியிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மேலும் அமைச்சரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com