மேற்கு வங்க ஆளுநர் அனந்த போஸ் மீது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வைத்துள்ள பாலியல் புகார் பேசுபொருளாகி உள்ளது. எக்ஸ் வலைத்தளத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சகாரிகா கோஸ் வெளியிட்ட பதிவில்,
“ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு, ஆளுநர் அனந்த போஸ் பாலியல் துன்புறுத்தல் இழைத்துள்ளார். இதை பாதிக்கப்பட்ட பெண்ணே எங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புகார் அளிக்க, கொல்கத்தாவின் ஹரே சாலையில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு, அந்த பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டை ஆளுநர் அனந்தபோஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தேர்தலுக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தன்னை அவமதிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ள அவர், இதற்கெல்லாம் தான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் இக்குற்றச்சாட்டு மேற்கு வங்க தேர்தல் களத்தில் சற்று பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.