“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்

“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்
“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்
Published on

சத்தீஸ்கரில் 15 வருடங்களுக்குப் பின்னர் பாஜக தோல்வியடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இதில் மிசோரமில் எம்.என்.எஃப் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸும், தெலங்கானாவில் சந்திரசேகர் ராவும் ஆட்சியைப் பிடிக்கவுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இழுபறி நிலையில் உள்ளது. 

இந்தத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவிலான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல அரசியல் விமர்சகர்களும் இந்தத் தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவின் எதிர்க்கட்சிகள் இந்த முடிவுகளை வரவேற்றுள்ளனர். ஏனென்றால் பாஜக 15 வருடங்களாக ஆட்சியில் இருந்து வந்த சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தை காங்கிரஸ் கைப்பற்றவுள்ளது. அதேபோன்று பாஜக ஆட்சி செய்த ராஜஸ்தானிலும் காங்கிரஸ் அமையவுள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேட்டியளித்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலைச்சர் அஜித் ஜோகி, தான் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார். 15 வருடங்களுக்குப் பிறகு ரமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வேண்டாம் என மக்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஜித் ஜோகி இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2000 முதல் 2003 வரை சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். காங்கிரஸில் இருந்து விலகிய பின்னர் 2016ஆம் ஆண்டு சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவினார். தற்போதைய முடிவுகள் படி 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் 55 இடங்களுக்கு மேல் காங்கிரஸும், 25 இடங்கள் வரை பாஜகவும் கைப்பற்றி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com