இருசக்கர வாகனத்தின் பின்னால் கைப்பிடி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களின் பாதுகாப்பு பயணத்துக்காக மோட்டார் வாகன விதியில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கைப்பிடி, FOOT REST ஆகியவை கட்டாயம் இருக்கும் வகையில் இருசக்கர வாகனங்களை தயாரிக்க வேண்டும் என விதியில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
மேலும், பின்னால் அமர்ந்திருப்பவர்களின் புடவை, துப்பட்டா சக்கரத்தில் சிக்காமல் இருக்க, சக்கரத்தை பாதியளவு மறைக்கும் டிஸ்க் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அம்சமும் மோட்டார் வாகன விதியில் சேர்க்கப்பட உள்ளது. தற்போது பெரும்பாலான இளைஞர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் கைப்பிடி இல்லாததால், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.