கடந்த ஆண்டைக் காட்டிலும் கைத்தறிப் பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதாகவும், இதனால் விற்பனை இரட்டிப்பாகும் என்றும் மத்திய ஜவுளித்துறை தெரிவித்துள்ளது.
கைத்தறிப் பொருட்களின் விற்பனை இரட்டிப்பாக மத்திய ஜவுளித்துறை எடுத்த முயற்சிக்கு மத்திய ஜவுளித்துறையால் இண்டியா ஹேண்ட்லூம் பிராண்ட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைத்தறிப் பொருட்களின் விற்பனை இந்த நிதியாண்டில் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைத்தறி துணிகளின் தரத்திற்கான ஆதாரமாக இண்டியா ஹேண்ட்லூம் பிராண்ட் திகழ்கிறது. கடந்த ஆண்டு இந்த பிராண்டின் கீழ் 95.63 கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு இந்த விற்பனை 180 கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.