ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதோடு மத்திய அரசின் போர் விமான தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தை பயன்படுத்தாமல் ரிலையன்ஸ் அனில் அம்பானியின் நிறுவனத்தை தேர்வு செய்தது குறித்தும் காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தின் ஊழியர்களை ராகுல் காந்தி இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர் “HAL ஒரு சாதாரண நிறுவனமல்ல, சுதந்திர இந்தியாவின் பாதுகாப்பை கட்டமைத்த நிறுவனம், பல்வேறு விமானங்களை தயாரித்துக் கொடுத்த சொத்து HAL என பாராட்டினார்.
மேலும் பேசிய ராகுல் “போர் விமானங்களை கட்டமைக்கும் திறனும் அனுபவமும் உங்களுக்கு இருக்கிறது, ரஃபேல் விமானம் உங்களுக்கானது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் HAL நிறுவனத்தை இன்னும் பன்மடங்கு உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்வோம்” என்றார்.