குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தண்டனை விவரம் நாளை அறிவிப்பு

குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தண்டனை விவரம் நாளை அறிவிப்பு
குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தண்டனை விவரம் நாளை அறிவிப்பு
Published on

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவ்தா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை விவரம் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என கடந்த 25 ஆம் தேதி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவுடன் ஹரியானா மற்றும் பஞ்சாபில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் ஊடக வாகனங்கள், போலீசார், பொதுமக்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். வன்முறைகளில் 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளனர்.

வன்முறை காரணமாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டிருந்த பெரும்பாலான ரயில்கள் தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணியை ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. தேரா சச்சா சவுதா அமைப்பிற்கு வங்கிகளில் இருக்கும் கணக்குகள் பற்றிய விவரங்களைத் தருமாறு வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இருமாநில அரசுகளும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை விவரம் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. குர்மீத் ராம் தற்போது அடைக்கப்பட்டுள்ள ரோதக் சிறைக்கு வந்து நீதிபதி தீர்ப்பு வழங்கவிருக்கிறார். மீண்டும் கலவரம் மூளாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com